பத்திரிகையாளரை திட்டிவிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்

26.01.2022 13:47:47

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'மைக்' இருப்பதை அறியாமல் செய்தியாளர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு பின் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கோரினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பணவீக்கம் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது 'பாக்ஸ் நியூஸ் டிவி' செய்தியாளரான பீட்டர் டூசி, ''பணவீக்கத்தை அரசியல் சுமையாக கருதுகிறீர்களா,'' என கேட்டார்.
அதை மறுத்த ஜோ பைடன், 'மைக்' இருப்பதை அறியாமல் ''அதிக பணவீக்கம் என்பது அதிக சொத்து,'' என கூறினார்.பின், கேள்வி கேட்ட பீட்டர் டூசி மீதுள்ள கோபத்தில் கெட்ட வார்த்தையை முணுமுணுத்தார். இது மைக்கில் பதிவானது பற்றி பின் அறிந்த ஜோ பைடன், ஒரு மணி நேரத்தில் பீட்டர் டூசியை தொலைபேசியில் அழைத்து, தனிப்பட்ட முறையில் திட்டவில்லை என கூறி மன்னிப்பு கோரினார்
.பீட்டர் டூசி கூறும்போது, ''ஜோ பைடன் தன் தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது,'' என்றார்.