ETR.FM

புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டம்!

14.03.2024 07:26 1 நிமிட வாசிப்பு
புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டம்!

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.

மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயக்க முறைகள் கொண்ட புதிய ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்