ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழப்பு!!

19.01.2022 04:56:21

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுந்து இதுவரை 26 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.