பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

10.01.2024 15:59:04

இந்த வருடம் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் பட்சத்தில் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.