எல்லா பெண்களும் 8 குழந்தைகள் பெத்துக்கணும்.." வினோத காரணம் சொன்ன அதிபர் புதின்!

01.12.2023 15:00:00

மாஸ்கோ: உக்ரைன் போர், பொருளாதாரத் தடைகள் என்று ரஷ்யா இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பேச்சு இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


ரஷ்ய தலைநகர் உலக ரஷ்ய மக்கள் கவுன்சிலின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் புதின் கலந்து கொண்டார். அதில் புதின் ரஷ்யாவின் குடும்பங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

அதாவது. அப்போது பேசிய புதின், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெரிய குடும்பங்களே பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் காலத்தில் ரஷ்யாவின் மக்கள்தொகையை அதிகரிப்பதே தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.