2022ல் உணவு உற்பத்திக்கு முன்னுரிமை: கிம் ஜோங்
2022-ல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் பேசினார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவை 1994ல் நாட்டின் அதிபராக கிம் ஜோங் இல் பதவி ஏற்றார்.பின், 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கிம் ஜோங் இல் 2011 டிச., 17ம் தேதி உயிரிழந்தார். இவரது மகனான கிம் ஜோங் உன் தற்போது அதிபராக உள்ளார்.
இந்நிலையில், கிம் ஜோங் அதிபராக பதவியேற்றதன் 10வது ஆண்டையொட்டி வடகொரிய தொழிலாளர்கள் கட்சி உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது.
வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2022 இந்த புத்தாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கிம்ஜோங் உன் பேசினார்.
வழக்கமாக தன் பேச்சில் அமெரிக்கா, தென்கொரியாவை விமர்சித்து பேசவில்லை. வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியே கிம் ஜோங் பேசியதாக கூறப்படுகிறது.