'பொம்மை பிரதமர்: இம்ரான் மீது நவாஸ் தாக்கு

25.12.2021 11:18:42

பாக்., பிரதமர் இம்ரான் கானை, 'பொம்மை பிரதமர்' என்று தான் இந்தியா அழைக்கிறது,” என, பாக்.,கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் கூறினார்.

அண்டை நாடான பாக்.,கில் மூன்று முறை அதிபராக இருந்தவர் நவாஸ் ஷெரீப், 71. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டவர். தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷெரீப், மருத்துவக் காரணங்களுக்கான லாகூர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று பிரிட்டனின் லண்டனில் வசிக்கிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் லாகூரில் நேற்று நடந்தது.

லண்டனில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்'வாயிலாக இந்தக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசியதாவது:பாக்., பிரதமர் இம்ரான் கானை இந்தியாவில் பொம்மை என்றுதான் அழைக்கின்றனர். அமெரிக்காவோ மேயருக்கும் குறைவான அதிகாரம் கொண்டவர் என இம்ரானை விமர்சிக்கிறது.மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ராணுவ உதவியுடன் இம்ரான் இந்தப் பதவிக்கு வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.