தவறான தகவல் வழங்கும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

24.03.2024 09:35:50

தவறான தகவல்களை வழங்கும் பொலிஸாருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் விரும்பியபடி வேலை செய்ய முடியாதவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் சீருடையைக் கழற்றிவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .