ETR.FM

செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து.

20.11.2026 09:18 1 நிமிட வாசிப்பு
செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து.

செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலில் மூழ்கிய எஞ்சியோரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள செனகல் நாட்டின் கடற்கரை நகரான யெனியில் இருந்து நேற்று அகதிகள் படகு புறப்பட்டுள்ளது. 

வட அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி புறப்பட்ட அந்த படகில் அகதிகள் 50க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர்.

படகு நடுக்கடலில் பயணம் செய்தபோது படகு பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கியுள்ளனர். 

இந்த விபத்து குறித்து அறிந்த செனகல் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் அகதிகளில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்