சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒக்சிமீட்டர்கள்

09.09.2021 05:51:31

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

21 பெட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 4,200 ஒக்சிமீட்டர்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2,344,642 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவன அதிகாரிகளிடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த ஒக்சிமீட்டர்களை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.