ETR.FM

'ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்'.

17.11.2026 15:32 1 நிமிட வாசிப்பு
'ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும்'.

மத்தியஸ்தத்தை முன்னெடுத்துச் செல்ல ஈரானுடன் இன்று சந்திப்பு நடைபெறும் என கட்டார் அறிவித்துள்ளது.

அமெரிக்க-ஈரான் மோதலைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்த முயற்சிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் மணிநேரங்களில் ஈரானிய அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நடைபெறும் என்றும் தோஹா தெரிவித்துள்ளது.

மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், தற்போதைய முன்மொழிவுகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் ஈரானிய தரப்புடனான இன்றைய சந்திப்பு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி மஜித் அல்-அன்சாரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரு தரப்பினரின் நிலைப்பாடுகளுக்கு இடையிலான பிளவைக் குறைப்பதை இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். 

அத்துடன், எந்தவொரு பதற்றத்தையும் தவிர்க்குமாறு வாஷிங்டனையும் தெஹ்ரானையும் அவர் வலியுறுத்தினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்