உலக நாடுகளில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்!!
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 45 லட்சத்து 3 ஆயிரத்து 740 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 54 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 185,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இதுவரை 56,142,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 847,408 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் நேற்று மட்டும் 137,583 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் கொரோனாவால் நேற்று 73 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,235,401. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148,851. இத்தாலியில் நேற்று 61,046 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
மேலும் 133 பேர் நேற்று இத்தாலியில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இத்தாலியின் மொத்த கொரோனா பாதிப்பு 6,328,076. இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 137,646 பேர் உயிரிழந்தனர். மேலும் 5,119,893 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளனர்.இத்தாலிக்கு அடுத்த பிரான்சில் 58,432; கனடாவில் 35,127; துருக்கியில் 33,520; ஆஸ்திரேலியாவில் 32,222 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று 28,458 பேருக்கு கொரோனா உறுதியானது.