பேருந்துடன் கார் மோதி விபத்து – 16 பேர் பலி!

14.01.2022 05:45:48

தென்னாப்பிரிக்காவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

லிம்பொபோ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து வெடித்துள்ள நிலையில் அதில் பயணித்த 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.