ETR.FM

சீமெந்து விலை அதிகரிப்பு!

08.11.2026 15:44 1 நிமிட வாசிப்பு
சீமெந்து விலை அதிகரிப்பு!

இலங்கையில் 50 கிலோ கிராம் நிறையுள்ள சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை திருத்தம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

இந்த விலை உயர்வு கட்டுமானச் செலவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வீடுகளைக் கட்டும் தனிநபர்களையும், கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களையும் பாதிக்கும்.

நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியிலேயே இந்த புதிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்