ETR.FM

எரிவாயு கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

04.11.2021 07:31 1 நிமிட வாசிப்பு
எரிவாயு கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் காயமடைந்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்