துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!
30.12.2021 06:53:27
அமெரிக்காவின் டென்வர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
சந்தேக நபர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.