ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்று!
01.03.2024 08:15:08
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.