ETR.FM

வவுனியாவில் இரத்ததான நிகழ்வு

16.11.2021 05:53 1 நிமிட வாசிப்பு
வவுனியாவில்  இரத்ததான நிகழ்வு

வவுனியாவில் முன்னணி விளையாட்டு கழகமான ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர்கோவில் வீதியில் அமைந்துள்ள விளையாட்டு கழக கட்டிடத்தில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ள இரத்ததான நிகழ்வில் கழக உறுப்பினர்களுடன் ஏனைய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொண்டு இரத்ததானம் வாழங்குமாறு கழகத்தின் தலைவர் மு. ஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்