ETR.FM

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

05.04.2024 15:10 1 நிமிட வாசிப்பு
சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு சலுகையளித்த எலான் மஸ்க்

எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகையை அறிவித்துள்ளார்.

எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரபல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரை உலகினர் என பலரும் கணக்குகள் தொடங்கி தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் வகையில் பிரபலங்களுக்கு புளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு, எலான் மஸ்க் இலவச சலுகையை அறிவித்துள்ளார்.

பணம் கட்டாத சிலருக்கும் புளூடிக் குறியீடு வந்ததையடுத்து அதன் பயனர்கள் மிகவும் மகிழ்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்