ஓமானின் காசாப் (Khasab) நகருக்கு வடக்கே 13 கடல் மைல் (24 கி.மீ) தொலைவில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் கப்பல் பணியாளர் ஒருவர் காணாமல் போனதாகவும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹோர்முஸ் நீரிணையில் ஒரு டேங்கர் கப்பல் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றால் தாக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது, அது தற்போது அணைக்கப்பட்டுவிட்டது. காணாமல் போன பணியாளரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கப்பலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், அப்பகுதியில் பயணிக்கும் பிற கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால் உடனடியாக UKMTO-விடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.