'இடா' புயல்: நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்
02.09.2021 12:51:54
அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயலால் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியால் தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்து உள்ளன.
நியூயார்க் நகரின் ஆளுகையின் கீழ் வரும் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்துள்ளார்.