ETR.FM

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு !

14.06.2021 13:33 1 நிமிட வாசிப்பு
கடந்த 24 மணித்தியாலத்தில் 1,122பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு !

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து இரண்டாயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 931பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 957பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 725பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 59ஆயிரத்து 240பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்