நைஜீரியாவில் குண்டு வெடித்து பலர் பலி
24.12.2021 11:52:38
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைடுகுரி நகருக்கு செல்ல, அந்நாட்டின் அதிபர் முகமது புகாரி திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் மைடுகுரி நகரில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒரு இளம்பெண் உட்பட பலர் உயிரிழந்தனர்.பலியானோர் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த பகுதிகளில் பயங்கரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால், நேற்று நடந்த இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.