அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
30.01.2022 08:22:57
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நியூயோர்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
லாங் ஐலேண்ட் பகுதியில் பெண்ணொருவர் பனியில் உறைந்த நிலையில் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.