கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 435பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு !
28.06.2021
19:33
1 நிமிட வாசிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 435பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 13ஆயிரத்து 203பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 227பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 626பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 512பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 78ஆயிரத்து 350பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.