ETR.FM

கொவிட்-19 தொற்றினால் ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

06.02.2021 10:10 1 நிமிட வாசிப்பு
கொவிட்-19 தொற்றினால் ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்து 50பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 46ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவோக்கியாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 59ஆயிரத்து 533பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 630பேர் பாதிக்கப்பட்டதோடு 74பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 20ஆயிரத்து 112பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 561பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 34ஆயிரத்து 371பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்