ரஷ்யா - உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்!

22.07.2022 12:40:46

கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம், தானிய ஏற்றுமதியைத் தடுப்பதற்கான மற்றொரு ஐ.நா. தலைமையிலான பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை துருக்கியில்) நடைபெறும் என்று உறுதிப்படுத்தியது. மேலும் ஒரு ஆவணம் கையொப்பமிடப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு நெருக்கமான உக்ரைனிய நாடாளுமன்ற ஒருவர், இந்த ஒப்பந்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குரல் கொடுத்தார்.

ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வரவேற்றது. ஆனால் அதை செயற்படுத்துவதற்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியது.

‘நாம் முதலில் இந்த நிலையில் இருந்திருக்கக் கூடாது. இது ரஷ்யன் கூட்டமைப்பு வேண்டுமென்றே உணவை ஆயுதமாக்குவதற்கு எடுத்த முடிவு’ என்று திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.

இந்த திட்டத்தில், உக்ரைனிய கப்பல்கள் தானியக் கப்பல்களை துறைமுக நீர் வழியாக உள்ளேயும் வெளியேயும் வழிநடத்துகின்றன, ஏற்றுமதி நகரும் போது ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கிறது, துருக்கி – ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆயுதக் கடத்தல் குறித்த ரஷ்ய அச்சத்தைப் போக்க கப்பல்களை ஆய்வு செய்கிறது. கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் உரங்களை ரஷ்ய ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.