ETR.FM

சீனாவில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம்

14.07.2021 10:24 1 நிமிட வாசிப்பு
சீனாவில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம்

கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர்.

36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்