கொரோனா தொற்று பரவலை முற்றிலும் ஒழிக்க முடியாது'

26.11.2021 08:16:49

''கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது; அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும்,'' என, அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்தார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்த தொற்று பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
இந்த கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியாது. பொதுவாக தொற்று நோய்கள் பரவும் போது முதலில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும், அதன் பின் கட்டுப்படுத்தப்படும். படிப்படியாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பின் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.போலியோ, அம்மை நோய், மலேரியா போன்றவை அமெரிக்காவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

அதைப் போல கொரோனா தொற்று பரவலை ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். தடுப்பூசி ஒன்றே அதை கட்டுப்படுத்த கூடிய ஆயுதமாக உள்ளது.கட்டுப்படுத்துவது என்றால் எந்த எண்ணிக்கை வரை நாம் ஏற்றுக் கொள்ளப்போகிறோம் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 70 - 80 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தியது ஆகாது.

இவ்வாறு அவர் கூறினார்.