ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

09.11.2024 08:59:17

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக நடைபாதையில் குண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு ரயில் வர இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த நேரத்தில் ரயில் வந்திருந்தால் பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் வரையில் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.