என்டி முர்ரே போராடி தோல்வி !

02.11.2021 11:28:00

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், என்டி முர்ரே போராடி தோல்வியடைந்துள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் ஜேர்மனியின் டொமினிக் கோஃபரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என டொமினிக் கோஃபர் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய என்டி முர்ரே செட்டை 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால், செட் டை பிரேக் வரை நகர்ந்தது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய டொமினிக் கோஃபர், செட்டை 7-6 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.