ETR.FM

தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி!

30.01.2021 16:52 1 நிமிட வாசிப்பு
தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி!

வலி.வடக்கு- தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றுள்ளது.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைக்க கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியில் இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்