ETR.FM

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி வருகிறார்!

09.10.2024 09:06 2 நிமிட வாசிப்பு
அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி வருகிறார்!

அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். நாங்கள் கடற்படைக்கு தேவையான உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து பெறுகிறோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்கா சிறிலங்கா கடற்படையின் கடல் கண்காணிப்பிற்காக புத்தம் புதிய விமானத்தை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இந்த விமானத்தை கையளிக்கும் நிகழ்வு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்