ETR.FM

அதிக நிதி இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த தேவைப்படும் – UN

24.03.2021 07:10 1 நிமிட வாசிப்பு
அதிக நிதி இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த தேவைப்படும் – UN

இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என ஐ.நாடுகள் சபையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் (Johannes Huisman) தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் கோரோ ஒனோஜிமாவுக்கு (Goro Onojima) எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கடிதத்தில் தீர்மானத்தில் தொடர்புடைய விதிகள் 2021ஆம் ஆண்டிற்கான திட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அல்லது 2022ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை என குறிபிட்டார்.

அதன்படி, வரைவுத் தீர்மானம் A / HRC / 46 / L.1க்கு, கூடுதலாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் உள்ளிட்ட பல செலவுகளை அவர் அதில் சுட்டிக்காட்டினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்