'நாசா'வின் எதிர்கால விண்வெளி பயணம்
நாசாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா' தரப்பிலிருந்து எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.முதல் டாக்டர்இதற்கான வின்வெளி வீரர்களை தேர்வுசெய்யும் பணி சமீபத்தில் நடைபெற்றது.இதற்கு தங்களை தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் முதற்கட்டமாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரும் டாக்டருமான லெப்டினன்ட் கர்னல் அனில் மேனன் 45 என்பவரும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்து உள்ளது.விண்வெளிக்குபயணிக்கும் விமானப்படையை சேர்ந்த முதல் டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.