ETR.FM

10,000 தனியார் பேருந்து சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகல்

01.01.2022 07:07 1 நிமிட வாசிப்பு
10,000 தனியார் பேருந்து சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகல்

சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்