ETR.FM

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஹங்கேரியில் 30ஆயிரத்தை நெருங்குகின்றது.

06.07.2021 09:00 1 நிமிட வாசிப்பு
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஹங்கேரியில் 30ஆயிரத்தை நெருங்குகின்றது.

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29ஆயிரத்து 996பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 262பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், வைரஸ் தொற்றினால் 65பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38ஆயிரத்து 71பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 40ஆயிரத்து 195பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்