ETR.FM

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்!

17.07.2024 09:06 1 நிமிட வாசிப்பு
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்  விஐயம் செய்துள்ளனா்.

குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.

அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும், வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டதுடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மகிபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்