ETR.FM

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

06.07.2021 08:35 1 நிமிட வாசிப்பு
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாவது டோஸாகப் பெற்றவர்களுக்கு இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நாளை முதல் பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் என்பன தகுதிபெற்றவர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்