ETR.FM

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்

27.10.2024 13:26 1 நிமிட வாசிப்பு
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்

பிரித்தானியாவில் பகுதியில் சிறுவன் கொலை வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இஸ்லிங்டனில் (Islington) உள்ள கோர்டால்ட்(Courtauld Road) சாலையில் அக்டோபர் 22ம் திகதி நள்ளிரவுக்கு பிறகு 16 வயது சிறுவன் டெயான்டே மௌவட்-ஸ்லேட்டர் (Deonte Mowatt-Slater) கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

  

மீட்பு படையினர் விரைந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கத்திக்குத்து காரணங்களால் அவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவத்தில் Tufnellபூங்கா பகுதியை சேர்ந்த 21 இளைஞர் பிரான்சி மெக்கார்த்தி (Francie McCarthy) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் பிரான்சி மெக்கார்த்தி சனிக்கிழமை தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்