கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 548பேர் பாதிப்பு- 22பேர் உயிரிழப்பு !
01.07.2021
09:51
1 நிமிட வாசிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 548பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 15ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 295பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழாயிரத்து 087பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 466பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 81ஆயிரத்து 902பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.