காரைநகரில் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

14.12.2023 06:01:00

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம்(13) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகொன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.