ETR.FM

சிப் கொள்வனவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய ஏற்றுமதி விதிகள்.

17.11.2026 15:34 1 நிமிட வாசிப்பு
சிப் கொள்வனவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா புதிய ஏற்றுமதி விதிகள்.

சீன நிறுவனங்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப்களை மறைமுகமாகப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி, மேம்பட்ட சிப்களை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விசேட அனுமதி பெற வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்கள் ஊடாக சீன நிறுவனங்கள் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பப் போட்டி மேலும் தீவிரமடையக்கூடும் என சர்வதேச அரசியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்