உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு

22.09.2021 15:38:33

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 520 பொருட்களுக்கு வரி இல்லாமல் இருந்ததாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய், உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு வரியை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.