ETR.FM

“வியாபாரத்தில் விவேகம் .

23.11.2026 09:18 1 நிமிட வாசிப்பு
“வியாபாரத்தில் விவேகம் .
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, “வியாபாரத்தில் விவேகம் – வாழ்க்கையில் வெற்றி” என்ற கருப்பொருளில் தொழில் துறையினர் மற்றும் சமூக நலன் விரும்பிகளுக்கான விசேட உந்துதல் உரை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை முகத்துவாரம் முக்குலத்தோர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவின் பிரபல தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பேச்சாளர் கலாநிதி ஐ. ஜெகனின் சிறப்புரையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் தொடர்ச்சியாக  நாளை ஏர்டெல் மற்றும் போகாவத்தை பிரதேசங்களிலும் இந்நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வுகளில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இத்தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் அடுத்தகட்டமாக 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பிலும் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மறைச் சிந்தனை ஆகியவற்றை வளர்த்து, கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியாளர்களாக உருவாகுவதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டலையும் வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பூபாள விடியல்