ETR.FM

இயக்குநரான சந்தானத்தின் மகன்!

20.11.2026 09:06 1 நிமிட வாசிப்பு
இயக்குநரான சந்தானத்தின் மகன்!

நடிகர் சந்தானத்தின் மகன் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் டிவி சீரியல் நடிகர் குறிஞ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் அடுத்ததாக லவ் பைட் திரைப்படம் வெளியாகிறது. Zombie ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவான இப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

திரையுலக நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் கால்பதிப்பது என்பது காலம்காலமாக தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது சந்தானத்தின் மகன் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இவர் தற்போது Pilot Film ஒன்றை இயக்கி வருகிறார். அதில், விஜய் டிவி அழகே அழகே சீரியல் நடிகர் குறிஞ்சி நடிக்கிறார்.

படப்பிடிப்பில் சந்தானத்தின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குறிஞ்சி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இயக்குநராக களமிறங்கவிருக்கும் சந்தானத்தின் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்