ETR.FM

பாகிஸ்தானில் பயங்கரம்.

12.11.2026 08:38 1 நிமிட வாசிப்பு
பாகிஸ்தானில் பயங்கரம்.

பாகிஸ்தான் பொலிஸ் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரிய துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேலும், 5 பொலிஸ் வாகனங்களுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க பொலிஸார் வாகனங்களில் ரோந்து சென்றனர். 

இதன்போது, அருகிலுள்ள மலை உச்சியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பொலிஸ் வாகனங்கள் மீது சரமாரிய துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் 10 பொலிஸார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்