புஷ்பா 2 வோடு மோதுகிறதா சிவகார்த்திகேயனின் அமரன்?

13.03.2024 07:00:00

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.
 

 

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்துக்கு இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத அளவுக்கு 60 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் 30 நாட்கள் உள்ளதாம். அதை முடித்துவிட்டு ஆகஸ்ட்  மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.