ETR.FM

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு !

19.05.2021 11:00 1 நிமிட வாசிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு !

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்காயிரத்து 107 வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முகக்கவசம் அணியாமை காரணமாக 3 ஆயிரத்து 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தமிழக அரசின் வழிக்காட்டுதல், நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்