விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்!

23.07.2026 14:38:25

தமிழ் சினிமாவின் ஈடு இனையில்லா கமர்ஷியல் நாயகனாக திகழ்ந்த மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்போதும் போல் மக்களை கவர்ந்தாரா? பார்ப்போம். கௌதம் மேனன் மகள் மமிதா பைஜு, சிறு வயதிலேயே அம்மா இறப்பை கண்டு பயந்து சுபாவம் உள்ளவராக வளர்கிறார், ஜெய்லராக இருக்கும் கௌதம் மேனனுக்கு ஜெயிலில் இருக்கும் தளபதி விஜய் நட்பாகிறார்.

 

அவர் தன் மகளை மிக தைரியமாக இந்த சமுதாயத்தில் வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அந்த நேரத்தில் எதிர்பாரத விபத்தில் கௌதம் மேனன் இறக்க, மமிதாவை வளர்க்கு பொறுப்பை விஜய் ஏற்றுக்கொண்டு, அவரை இந்த சமுதாயத்தில் மிக தைரியமான பெண்ணாக வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.

அந்த நேரத்தில் மமிதா தெரியாமல் வில்லன் செய்யபோகும் சதிதிட்ட வேலையின் பையில் ஒன்றை பெற, வில்லன் கேங் மமிதாவை பிடிக்க, பிறகு என்ன தளபதி மமிதாவை மீட்டு, இந்த சதிதிட்டதிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆடும் ஆக்‌ஷன் அதகளமே மீதிக்கதை.

தளபதி இந்த வெறும் வார்த்தை அல்ல, தமிழக மக்களின் கோடிக்கணக்கானவர்களின் எமோஷ்னல், இதை மே 4 அன்றே மக்கள் நிரூபித்துவிட்டனர், இவர் எல்லாம் இனி நடிக்க மாட்டேன் என சொல்வது தமிழ் சினிமா வர்த்தகத்திற்கு தான் ஆபத்து.

காட்சிக்கு காட்சி 52 வயதிலும் தூள் கிளப்புகிறார். அதிலும் ரசிகர்களுகாக அந்த ஒரு நிமிடம் நடன காட்சி, இவர் ஆட்டத்தை இனி பார்க்க முடியாது என்பதை எப்படி சொல்ல முடியும், ரசிகர்கள் அவரின் ஆட்டத்தை மறந்து இனி சினிமாவிற்கு வரமாட்டாரா என்ற ஏக்கமே அதிகம் தெரிந்தது.

அதே போல் ஆக்‌ஷன் காட்சி அதே எனர்ஜி அதிலும் இடைவேளை அந்த பேக்ட்ரி சண்டைகாட்சி, கிளைமேக்ஸ் ரோபோட் சண்டைகாட்சி என அனைத்தும் அடி தூள் மொமண்ட் தான். ப்ளாஷ் பேக் தளபதி போலிஸாக வரும் காட்சி அதிலும் அவர் முதலமைச்சர் ஆனதும் அதையெல்லாம் பார்க்கும் போது ரசிகர்கள் பெர்சனல் ஆக கனேக்ட் செய்து கொண்டாடி தீர்ப்பார்கள்.

மமிதா பைஜு விஜய்க்கு பிறகு படத்தின் முக்கிய கதாபாத்திரம் இவர் தான், விஜய் சொல்வதை கேட்காமல் சுந்ததிரமாக வாழ வேண்டும் என காதல் அதன் பின் வரும் அசம்பாவிதம், அதிலிருந்து மீண்டும் விஜய் எதற்காக நம்மிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொண்டு அவர் தைரியமான பெண்ணாக மாறி கிளைமேக்ஸில் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பது என அவர் பங்கையும் சிறப்பாக செய்துள்ளார்.

பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் டீசண்ட், ஆஹா ஓஹோ என்றில்லை, பாபி தியோல் கேரக்டர் அவர் ஏன் இப்படி மாறினார் என்பதற்காக ஒரு காட்சி வைத்துள்ளார் வினோத், உண்மையாவே ஒரு கமர்ஷியல் படத்தில் இப்படி வில்லனுக்கு ஒரு பேக் ஸ்டோரி வைத்தது நன்று, ஆனால் அதற்காக அவர் இண்டர்நேஷனல் லெவலில் காட்டி எங்கெங்கோ கதையை கொண்டு சேன்றது, ஒரு கட்டத்திற்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிட்டது.

படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு விஜய் ப்ளாஷ்பேக் வரைக்குமே நன்றாக சென்றது, ஆனால் அந்த மதம் சார்ந்த சண்டை போஷன் படத்திற்கு முக்கியமாக இந்த கமர்ஷியல் களத்திற்கு கொஞ்சம் அந்நியமாகவே இருந்தது, அதை தவிர்த்து இருக்கலாம்.

ஆனாலும் கிளைமேக்ஸ் விஜய் அதிரடி ஆக்‌ஷன் அதை தொடர்ந்து ரசிகர்களுகாக வைத்த அந்த சர்ப்ரைஸ் புட்டேஜ் இதெல்லாம் படம் முடியும் போது தளபதி விஜய்யை கொண்டாட வைக்கின்றது. மேலும் படத்தில் குழந்தைகளுகாக விஜய் பேசும் ஒரு காட்சி மிக முக்கியமான ஒன்று, அப்படியான காட்சியை குழந்தைகள் பார்க்க முடியாதப்படி A சான்றிதழ் வாங்கிய பெரும் வருத்தம்.

டெக்னிக்கலாக அனிருத் பின்னணி சூப்பர் என்றாலும் விஜய்-அனிருத் காம்போ-விற்கு இருக்கும் கிக் இதில் இல்லை, அதோடு ஒளிப்பதிவு பல இடங்களில் நன்றாக இருந்தாலும் சில செட் ஒர்க் காட்சிகளில் கொஞ்சம் செயற்கையாக இருந்தது.

க்ளாப்ஸ்

விஜய் விஜய் விஜய்..இதற்கு மேல் என்ன வேண்டும்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி நிறைய விஷயங்களை திணித்தது கொஞ்சம் திகட்ட ஆரம்பித்துவிட்டது.

மொத்தத்தில் ஜனநாயகன் விமர்சனம் கடந்து விஜய் ரசிகர்கள் கொண்டாடும் படமாக வந்துள்ளது, இருந்தாலும் Farewell என்பது முழுக்க விஜய்யிசம் ஆக இருந்திருக்கலாம்.